|
| புதிய காற்றழுத்த மண்டலம்: இன்றும் மழை! |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 11:35 IST ) | |
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆந்திர கடற்கரையின் வடக்குப் பகுதியில் நேற்று கரையைக் கடந்தது.
இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி ராயலசீமா பகுதியில் நந்தியால் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
தமி௦ழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|