|
| கரூரில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்! |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 11:18 IST ) | |
ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்காத மத்திய, மாநில அரசைக் கண்டித்து, கரூர், லாலாபேட்டையில் அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 1998ல் கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. எனது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதால், அடுத்து வந்த அரசு மேம்பாலப் பணிகளை விரைவாக நடத்தவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. 18 மாதங்களில் இப்பணி முடிவடையும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார். ஆனால், இன்றுவரை மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கரூர் மாவட்ட மக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் மெத்தனப்போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லாலாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|