யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராஜபக்ச சவால் இந்தியாவுக்கே அவமானம் : வைகோ
சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 11:10 IST )
போர் நிறுத்தம் செய்யப்போவதில்லை என்று டெல்லியில் நின்று கொண்டு ராஜ பக்ச விடுத்த வால் 100 கோடி இந்தியர்களின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவால் என்று திமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய அரசுக்கு ஏற்படாத அவமானம் இப்போது நேர்ந்து விட்டது. இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கருவறுக்க, கொடிய ராணுவத் தாக்குதலை நடத்திவரும் சிங்கள அரச தலைவர் ராஜபக்ச, இந்தியத் தலைநகரில் நடந்துகொண்ட விதமும், ஆணவத்தோடும், திமிரோடும் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்; விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போரை நிறுத்தப் போவதே இல்லை என்று, கொக்கரித்து விட்டுச் சென்றுள்ளார்

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்து உள்ள நிலையில் சிறிலங்கா அரசும் போர்நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்துக்கு உள்ளாக, சிறிலங்கா அரச தலைவர் இவ்வளவு மமதையோடு பேசியது, தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களுக்கு மட்டும் அல்ல, நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்துக்கு, சுயமரியாதைக்கு விடப்பட்டு உள்ள சவால் ஆகும்.

இவ்வளவு துணிச்சலாக ராஜபக்ச பேசியதற்கு, இந்தியாவின் மன்மோகன்சிங் அரசுதான் காரணம் ஆகும். கடந்த நான்கு ஆண்டுக் காலமாகவே சிறிலங்கா அரசுக்கு எல்லாவிதத்திலும் இராணுவ உதவிகள் அளித்தும், ஆயுதங்கள், ராடார்களை வழங்கியும் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வட்டி இல்லாக் கடன் கொடுத்தும், சிறிலங்கா விமான ஓட்டிகள், இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்தும், இந்திய - சிறிலங்கா கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்வதும், இந்திய இறையாண்மைக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் சிறிலங்கா கடற்படை கண்ணிவெடிகளைப் போட அனுமதித்ததும், ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, சுவிட்சர்லாந்தும், நியூசிலாந்தும் கொண்டு வந்த தீர்மானத்தை சிறிலங்கா அரசோடு சேர்ந்து கொண்டு எதிர்த்துக் குரல் கொடுத்ததும்,

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தொடர்ந்து இந்திய இராணுவத் தளபதிகளை கொழும்புக்கு அனுப்பி, சிறிலங்கா அரசின் இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கியும், பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசின் செலவில் புதுப்பித்துக் கொடுத்தும், சிறிலங்கா வானூர்தி படைக்கு ரேடார்களைத் தந்ததோடு, இந்திய நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியும் ஒட்டுமொத்தத்தில், சிங்கள அரசு நடத்தும் இராணுவத் தாக்குதலை, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முழுக்க முழுக்கப் பின்னாலே இருந்து இயக்கி வந்தது இந்திய அரசுதான் என்ற மறுக்க இயலாத உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இலங்கைத் தீவில், மூன்று லட்சம் தமிழ் மக்கள் இராணுவத் தாக்குதலுக்கம் குண்டு வீச்சுக்கும் நடுவில், மரண பீதியில் துடிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 'இலங்கையில் இரண்டு வார காலத்துக்கு உள்ளாக போர் நிறுத்தம் ஏற்படாவிடில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள்' என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த ஏன் முனையவில்லை?

போர்நிறுத்தம் செய்ய சிறிலங்காவை நிர்ப்பந்திக்குமாறு மத்திய அரசை அந்த இரண்டு வார காலத்தில் தமிழக முதலமைச்சர் ஏன் வற்புறுத்தவில்லை?

'போர்நிறுத்தம் செய்யுமாறு, இந்தியா அரசு எங்களைக் கேட்கவே இல்லை' என்று மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் திமிரோடு சொன்னார்களே?

தாங்கள் நடத்தும் போருக்கு இந்திய அரசு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதால்தான், மகிந்த ராஜபக்ச டெல்லியில் மூர்க்கத்தனமாக தடித்த வார்த்தைகளை அகந்தையோடு சொன்னார்.

ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்புக் கவசம் விடுதலைப் புலிகள்தான். அவர்களை அழித்துவிட்டால் பின்னர் தமிழீழ மக்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பதுதான், சிங்கள அரசின் நயவஞ்சக திட்டம் ஆகும். இந்தத் திட்டத்துக்கு இந்திய அரசும் உடந்தை ஆகும்.

ஒரு காலத்தில் வல்லரசுகளையே எச்சரிக்கின்ற தகுதியும், மரியாதையும் பெற்று இருந்த பண்டித நேருவின் காலம் எங்கே? இந்திரா காந்தி அம்மையாரின் காலம் எங்கே? அடல் பிகாரி வாஜ்பாயின் காலம் எங்கே?

எட்டு கோடித் தமிழர்கள் மூச்சுவிட்டாலேயே பதர் போலக் காற்றில் பறக்கும் சிங்கள இனவெறி அரசின் தலைவர், டெல்லிக்கு வந்து திமிர்வாதம் பேசிவிட்டுப்போனது, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நடக்காத களங்கம் மிக்க அவமானம் ஆகும் என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜாதி சண்டையை தூண்டிவிடக்கூடாது: முதல்வர் கண்டனம்
விலைவாசி: தேமுதிக மகளிரணி ஆர்ப்பாட்டம்
சேலம்: என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை
சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
உறுப்பு தானம் செய்தவர் குடும்பத்துக்கு சலுகை: அன்புமணி
பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...