யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜாதி சண்டையை தூண்டிவிடக்கூடாது: முதல்வர் கண்டனம்
கோவை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 09:00 IST )
'பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி சண்டையை தூண்டிவிடக்கூடாது' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திமுக சார்பில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கோவையில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் போரை நிறுத்தும்படி யாரிடம் கேட்டுக்கொண்டோமோ அவரே (ராஜபக்சே) இலங்கை ராணுவம் பூனேரியைப் பிடித்து விட்டதாக அறிவிக்கிறார்.

இலங்கையில் சிங்களர்களுக்கு இணையான உரிமை தமிழர்களுக்கும் தேவை. சுயமரியாதையை சிங்களர் காலடியில் அடகு வைக்க முடியாது. இன்று யார், யாரோ இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றனர். இந்த உணர்வு ஏற்படுவதற்கு அண்ணாதுரையே காரணம்.

நம்மிடம் ஒற்றுமை இல்லாதது தான் இலங்கைத் தமிழர் பிரச்னை தீராததற்கு காரணம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் நமது கருத்துக்கள் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும்.

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இருந்து அரசியல் தெளிவு பெற்ற அறிஞர்களை கட்சிக்கு அண்ணாதுரை தேர்வு செய்தார்.

ஆனால், இன்று நியாயத்துக்காக வாதாட வேண்டிய சட்ட மாணவர்களே, சட்டத்தை மதிக்காமல் சண்டை, கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் வன்முறை பரவ, சில அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம். அரசியல் லாபத்துக்காக மாணவர்கள் இடையே ஜாதி உணர்வை தூண்டிவிடக்கூடாது.

மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டை ஆள வேண்டியவர்கள். கல்லூரிகளில் படிக்க வேண்டியது கத்திச் சண்டையல்ல; படிப்பு மட்டுமே. தாங்கள் தான் நாட்டின் எதிர்கால மன்னர்கள் என்பதை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விலைவாசி: தேமுதிக மகளிரணி ஆர்ப்பாட்டம்
சேலம்: என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை
சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
உறுப்பு தானம் செய்தவர் குடும்பத்துக்கு சலுகை: அன்புமணி
பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில்
இலங்கை தமிழர் பிரச்சனை : 17 ல் அனைத்துக் கட்சி கூட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...