|
| விலைவாசி: தேமுதிக மகளிரணி ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 ( 16:14 IST ) | |
விலைவாசி உயர்வு, மின்வெட்டை ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மகளிர் பிரிவு சார்பில், விலைவாசி உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய பிரேமலதா, 'விலைவாசி, மின் வெட்டு பிரச்னை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தற்போதைய விலைவாசி மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவது வரவேற்க்கப்பட வேண்டியது தான். ஆனால் அதை தரமானதாக அளிக்க வேண்டும். தற்போதைய விலைவாசி, மின் வெட்டு ஆகிய பிரச்னைகள் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டக் கல்லூரியில் நடந்த மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவர் தடுத்திருந்தால் கூட தற்போது தனிப்படை அமைத்து தேட வேண்டிய நிலை வந்திருக்காது' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|