யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சேலம்: என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை
சேலம் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008   ( 14:54 IST )
சேலம் அருகே, காவல்துறையினர் மீது குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே அக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (28). பலரிடம் கொள்ளை அடித்து ரவுடியாகச் சுற்றித் திரிந்த கோபி மீது 60க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள், 6 கொலை வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக கோபியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பனைமரத்துப்பட்டி அருகே ஏரிக்கரை அடுத்துள்ள கோயிலில் அவர் பதுங்கியிருந்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் இன்று காலை அங்கு விரைந்து, கோபியைச் சுற்றி வளைத்தனர். அப்போது காவல்துறையினர் மீது நாட்டு வெடி குண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி ரவுடி கோபி தப்ப முயன்றுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடி கோபியை பிடித்தனர். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபி இறந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
உறுப்பு தானம் செய்தவர் குடும்பத்துக்கு சலுகை: அன்புமணி
பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில்
இலங்கை தமிழர் பிரச்சனை : 17 ல் அனைத்துக் கட்சி கூட்டம்
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...