யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008   ( 14:39 IST )
இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் இன்று சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை 8 மணிக்கு, விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். உண்ணாவிரத மேடைக்கு நடிகர் விஜய் காலை 10.15 மணியளவில் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு, உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தல் அருகே இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேனர்களும், தட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உறுப்பு தானம் செய்தவர் குடும்பத்துக்கு சலுகை: அன்புமணி
பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில்
இலங்கை தமிழர் பிரச்சனை : 17 ல் அனைத்துக் கட்சி கூட்டம்
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அர‌சுக்கு ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...