யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
உறுப்பு தானம் செய்தவர் குடும்பத்துக்கு சலுகை: அன்புமணி
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008   ( 13:52 IST )
உடல் உறுப்புகளை தானம் செய்தவர்கள் குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் உட்பட சலுகைகள் வழங்கப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானம் அளித்தனர். இதன் பிறகு தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து மத்திய மக்கள் நல்வாழ்வு, மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் உறுப்புகளை தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினர் 13 பேருக்கு கேடயத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். இவ்விழாவில் மத்திய சுகாராத்துறை அமைச்சர் அன்புமணி பேசியதாவது:

நமது நாட்டில் ஆண்டுக்கு 35 லட்சம் பேருக்கு மாற்று உடல் உறுப்புகள் தேவைப்படுகின்றன. இதில் ஒரு லட்சம் பேர் கண் தானம் பெற காத்திருப்பவர்களும் அடங்குவர்.

உலக அளவில் ஆசியாவில் தான் உடல் உறுப்பு தானம் குறைவாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மிகவும் குறைந்த அளவே உறுப்பு தானம் செய்யப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு இலவச ரயில் பயணம் மற்றும் சுகாதாரக் காப்பீடு ஆகியவை வழங்கப்படும். மேலும் அத்தகைய குடும்பத்தினருக்கு அரசு துறைகளில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில்
இலங்கை தமிழர் பிரச்சனை : 17 ல் அனைத்துக் கட்சி கூட்டம்
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அர‌சுக்கு ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ்!
சட்டசபைதொடர் நிறைவு: 19 மசோதா நிறைவேற்றம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...