|
| பாமகவுடன் மீண்டும் கூட்டு? கருணாநிதி பதில் |
| கோவை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 ( 13:33 IST ) | |
பாமகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் எதுவும் நடக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி ஞாயிறு அன்று காலை கோவை வந்து சேர்ந்தார். பின்னர் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
இலங்கை பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று கடிதம் வாயிலாகவும், தொலைபேசி மூலமும் பிரதமரை நாங்கள் கேட்டு வருகிறோம். இது அரசியல் ரீதியான பிரச்னை என்பதால் பிரதமரிடம் மட்டும் வலியுறுத்தி வருகிறோம். கட்சி ரீதியான பணி என்றால் சோனியாவை அணுகலாம்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை இப்பிரச்னையில் திமுகவுக்கு திருப்தி ஏற்படாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே போர் என்ற்கிரார் ராஜபக்சே. அவரது பேச்சில் நம்பிக்கை இல்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, 'எதுவும் நடக்கலாம்' என்று பதிலளித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராக இருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக தான் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதாவும், வைகோவும் வலியுறுத்தி வருவது பற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, 'நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காகவே இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தி இருப்பார்களோ என நினைக்கிறேன்' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|