யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை தமிழர் பிரச்சனை : 17 ல் அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை (ஏஜென்சி), 15 நவம்பர் 2008   ( 18:15 IST )
இலங்கை தமிழர் பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து விவாதிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வருகிற வம்பர் 17 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய, இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவ்வாறு வலியுறுத்த தவறினால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வேண்டுமானால் நிவாரண பொருட்கள் அனுப்பலாம் எனக் கூறி மத்திய அரசு சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி, போர் நிறுத்தம் தொடர்பான தனது வலியுறுத்தலை கைவிட்டுவிட்டதாக குற்றச்சாற்று எழுந்தது.

இதனால் கடந்த 12 ஆம் தேதியன்று தமிழக சட்டசபையில், இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வைக்க மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினம் இலங்கை அதிபர் ராஜ பக்ச, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச இருந்ததால், இது விஷயத்தில் மத்திய அரசு ராஜ பக்சவை வலியுறுத்தும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்தது.

ஆனால் மத்திய அரசு வழக்கம்போல் அலட்சியம் காட்டியதை தொடர்ந்து, ராஜ பக்ச டெல்லியில் வைத்தே போர் நிறுத்தமெல்லாம் கிடையாது ; தாக்குதல் தொடரும் என்று திமிர்த்தனமாக பேட்டியளித்து விட்டு சென்றிருந்தார்.

மத்திய அரசோ இது விஷயத்தில் வாயே திறக்கததோடு மட்டுமல்லாது, ராஜ பக்சவிடம் என்ன பேசினோம் என்பதை கூட தெரிவிக்கவில்லை.அன்றைய தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நிர்வாணப்படுத்தி தாக்கி விரட்டியடித்து இருந்தது.

இதைக் கூட மத்திய அரசு தரப்பில் கண்டிக்கப்பட்டதா மற்றும் முன்பு இது தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதி மொழி மீறப்பட்டது என்ன ஆயிற்று என்று கேட்டதா என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் வழக்கம்போல் முதலமைச்சர் கருணாநிதி நேற்று சட்டசபையில், இலங்கை பிரச்சனைக்காக தேவைப்பட்டால் மத்திய அமைச்சர் பதவியை துறக்கவும் தயார் என்று ஒரு இழுவையான அறிவிப்பை வெளியிட்டார்.

ஆக மொத்தத்தில் இலங்கை பிரச்சனை வழக்கம்போல கிடப்பில் போடப்படும் சூழல் எழுந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில்,இந்த பிரச்சனையில் இனியும் கருணாநிதியை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வந்துவிட்டதாக தெரிகிறது.

இதனை உறுதிபடுத்தும்விதமாக இலங்கை தமிழர் பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் எப்படி அணுகுவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக வருகிற 17 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அர‌சுக்கு ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ்!
சட்டசபைதொடர் நிறைவு: 19 மசோதா நிறைவேற்றம்!
16-ல் கருணாநிதி கோவை பயணம்
ரவுடிகளை ஒழிப்பேன்: புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...