யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
ராமேஸ்வரம் (ஏஜென்சி), 15 நவம்பர் 2008   ( 13:43 IST )
மின்தடை காரணமாக ஐஸ் கட்டிகள் உற்பத்தியின்றி, மீன்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாளை‌க்கு 25 டன் இறால், 10 டன் கணவாய், 10 டன் நண்டுகள் மற்றும் சுமார் 250 டன் அளவுக்கு பலவகையான மீன்கள் பிடிபடுகின்றன. இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூல‌ம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி அரசுக்கு கிடைக்கிறது.

பிடிப்பட்ட மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் ஐஸ் கட்டிகள் மிக அவசியம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 ஐஸ் கம்பெனிகள் உள்ளன. இதில் பெரிய ஐஸ் பிளான்டிற்கு நாள் ஒன்றுக்கு 1,200 யூனிட், சிறிய பிளான்டிற்கு 1,000 யூனிட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், மின்பற்றாக்குறை காரணமாக பெரிய ஐஸ் பிளான்ட்கள் ஒரு மாதத்திற்கு 6,000 யூனிட்களும், சிறிய ஐஸ் பிளான்டுகள் மாதத்திற்கு 2,000 யூனிட்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மின்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ஐஸ் கட்டி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 கிலோ எடையுள்ள ஐஸ்கட்டியை ரூ.50க்கு மீனவர்கள் வாங்கிய நிலைமை மாறி, இப்போது 20 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியை ரூ.50க்கு வாங்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக, ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த மீனவ சங்க கூட்ட‌த்‌தி‌ல் ஐஸ் பிளான்ட்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வலியுறுத்தி இன்று 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அத‌ன்படி இ‌ன்று முதல் ‌மீனவ‌ர்க‌ளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. மீனவர்கள் கடலு‌க்கு ‌மீ‌‌ன்‌பிடி‌க்க செ‌ல்ல‌ாததா‌ல் ஆயிரக்கணக்கான படகுகள் கட‌ற்கரை‌யி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அர‌சுக்கு ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ்!
சட்டசபைதொடர் நிறைவு: 19 மசோதா நிறைவேற்றம்!
16-ல் கருணாநிதி கோவை பயணம்
ரவுடிகளை ஒழிப்பேன்: புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
தமிழகத்தில் 2வது நாளாக கடல் சீற்றம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...