|
| நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 13:42 IST ) | |
'சிதம்பரத்தில் வரும் 17ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்த வெலிங்டன் ஏரி, கடந்த 30 மாத கால திமுக ஆட்சியில் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த ஏரி பாலத்தின் அடித்தளம் உடைந்து எந்த நேரத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, கால்வாய்களில் நீர்வரத்து பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
அந்த ஏரியை சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்தும், அதற்கான பணிகள் இதுநாள் வரையில் துவங்கப்படவில்லை. திமுக அரசின் காகிதத் திட்டங்களில் இதுவும் ஒன்றோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.
இதேபோன்று, ரூ.40 லட்சம் செலவில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இதனால், அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
அதோடு, வடலூர் முதல் சேத்தியாதோப்பு வரையிலான சாலை, விருத்தாசலம் முதல் திட்டக்குடி வரையிலான சாலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
அதேபோன்று, மாவட்டத்தில் நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில்கள், கைத்தறி நெசவாளர்கள், கரும்பு விவசாயிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் விளைவித்த கரும்புகளை உரிய நேரத்தில் வெட்டுவதற்கு உத்தரவு வழங்கப்படுவதில்லை என்றும், அதையும் மீறி உத்தரவு பெற்று கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கினால், அதற்கான தொகை உரிய நேரத்தில் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
சிதம்பரம் நகராட்சி குப்பைமேடாகக் காட்சி அளிப்பதோடு, கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். நகரம் முழுவதும் தெரு விளக்குகள் எரியாத நிலையில், சொத்துவரி, வணிகவரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி தங்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மக்கள் நலனில் அக்கறை செலுத்த திமுக அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், வரும் 17ம் தேதி சிதம்பரம் பெரியார் சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|