யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சட்டசபைதொடர் நிறைவு: 19 மசோதா நிறைவேற்றம்!
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008   ( 09:30 IST )
சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, மறைந்த எம்.எல்.ஏ. வீர.இளவரசனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.

மறுநாள், கூடுதல் செலவுகளுக்கான துணை நிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. உரத்தட்டுப்பாடு, மின்வெட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் ஆகிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மறுதேதி குறிப்பிடப்படாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
16-ல் கருணாநிதி கோவை பயணம்
ரவுடிகளை ஒழிப்பேன்: புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
தமிழகத்தில் 2வது நாளாக கடல் சீற்றம்
வேலூரில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
போன் ஒட்டுகேட்பு விவகாரம்: அறிக்கை தாக்கல்
பதவியை துறக்கவும் தயார்: கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...