|
| ரவுடிகளை ஒழிப்பேன்: புதிய போலீஸ் கமிஷனர் உறுதி |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 15:33 IST ) | |
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கே.ராதாகிருஷ்ணன் 'சென்னை நகரில் ரவுடிகளை ஒழித்து, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவேன்' என்று உறுதியளித்துள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சேகர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் தற்போது சிவில் சப்ளைஸ் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றதும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை நகரில் ரவுடிகளை ஒழித்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முக்கியத்துவம் அளிப்பேன். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை நகரத்தை ரவுடிகள் மற்றும் குண்டர்கள் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|