யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் 2வது நாளாக கடல் சீற்றம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 15:13 IST )
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

சென்னையில் எண்ணூர், துறைமுகம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் கடல் கடும் சீற்றத்துடன் இருந்தது. சில இடங்களில் கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. இரண்டாவது நாளாக இன்றும் கடல் கொந்தளிப்பு தொடர்ந்தது.

இதேபோல் மண்டபம், ராமேஸ்வரம், நாகப்பட்டிணம், காரைக்கால், புதுவை, கடலூர் ஆகிய இடங்களில், கடலோரங்களில் ராட்சத அலைகள் உண்டாகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கடலூர் சில்வர் பீச்சில் கடல் நீர் உட்புகுந்தது. தேவனாம்பட்டினத்தில் தாழ்வான பகுதிகள் கடல் நீரில் மூழ்கின. கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே, தற்போதைய கடல் கொந்தளிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலூரில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
போன் ஒட்டுகேட்பு விவகாரம்: அறிக்கை தாக்கல்
பதவியை துறக்கவும் தயார்: கருணாநிதி
16ஆம் தேதி ஓசூரில் ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு
அரசு அலுவலகங்களில் குண்டு பல்புக்கு தடை
ஏப்ரல் வரை மின் தட்டுப்பாடு இல்லை: வீராசாமி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...