|
| போன் ஒட்டுகேட்பு விவகாரம்: அறிக்கை தாக்கல் |
| சென்னை (ஏஜென்சி), 14 நவம்பர் 2008 ( 14:39 IST ) | |
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக, நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணை கமிஷன் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் இயக்குனர் உபாத்தியாயாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மீது குற்றவழக்கு தொடரலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் உபாத்தியாயா, சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சட்ட ஆலோசகர் விஜயன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|