|
| பதவியை துறக்கவும் தயார்: கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), 14 நவம்பர் 2008 ( 13:07 IST ) | |
'இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யவும் தயார்' என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, தமிழக சட்டசபையில் இன்றும் விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.
இலங்கை அதிபர் ராஜபக்சே, 'விடுதலைப் புலிகளை அடக்குவது ஒன்றுதான்முக்கிய நோக்கம்' என்றும் 'தமிழர்களை காக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கமாட்டேன்' என்றும் கூறியுள்ளார். 'தமிழர்களை பாதுகாப்போம்; ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை அழிப்போம்' என்றும் அவர்கள் நடத்துகிற போரையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.
இதனை மிக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிப்பதே ராஜபக்சேவின் திட்டம்.
இதை பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி யோசிக்கலாம்.
இலங்கை தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அதற்காக, பதவியை துறக்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|