|
| 16ஆம் தேதி ஓசூரில் ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு |
| சென்னை (ஏஜென்சி), 14 நவம்பர் 2008 ( 12:59 IST ) | |
மின் வெட்டை கண்டித்து வரும் 16 ஆம் தேதி ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடும் மின் பற்றாக்குறையால் ஓசூரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் இந்த தொழிற்சாலைகளை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளின் உற்பத்திக் குறைவால் அரசின் வருவாயும் குறைந்துள்ளது. வேளாண் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், முதியோர்கள் என அனைவரும் மின் வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மின் வெட்டைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் வரும் 16 ஆம் தேதி ஓசூர் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|