யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அரசு அலுவலகங்களில் குண்டு பல்புக்கு தடை
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 10:35 IST )
மின் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* அரசு கட்டிடங்கள், பள்ளி- கல்லூரிகள், சுற்றுலாத்துறை கட்டிடங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் மின் சக்தி சேமிப்பை கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகிறது. தேவையற்ற பயன்பாட்டுக்கு மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது.

* அரசு கட்டிடங்களைப் பொறுத்தவரை 10 சதவீத மின்சார உபயோகத்தை பில்லுக்கு பில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாதம் 10 சதவீதம் குறைக்க வேண்டும். 6 மாதங்களுக்குள் 20 சதவீத மின்சார பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

* தெரு விளக்குகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றலுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதில் குழல் விளக்குகள் (டியூப் லைட்) பயன்படுத்த வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளில் சோடியம் ஆவி விளக்குகளை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

* தெரு விளக்குகளை மாலை 6 மணிக்கு முன் போடக்கூடாது. காலையில் 6 மணிக்கு பின் அணைக்கக் கூடாது.

* அலுவலகங்களில் ஒளிரும் (போகஸ்) லைட்டுகளையும், அலங்கார விளக்குகளையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏப்ரல் வரை மின் தட்டுப்பாடு இல்லை: வீராசாமி
சென்னையில் கடல் கொந்தளிப்பு: மக்கள் பீதி
16-ல் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
சென்னை நகர புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன்
சென்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி முதல்வர் சஸ்பெண்ட்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...