யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஏப்ரல் வரை மின் தட்டுப்பாடு இல்லை: வீராசாமி
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 10:18 IST )
தமிழகத்துக்கு மத்திய அரசு மின்சாரம் தர ஒப்புக் கொண்டிருப்பதால், வரும் ஏப்ரல் மாதம் வரை மின் தட்டுப்பாடு இருக்காது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு, மின் பற்றாக்குறை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு பிரச்னைக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி தமிழக சட்டப்பேரவையில் நேற்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இருளாக உள்ளதா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் வரை தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இல்லை. 2008க்கு பின் ஏன் இந்த நிலைமை எனில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி ஏராளமான ஆலைகள் வந்துள்ளன.

தமிழகத்தில் ஆண்டுக்கு வீடுகளுக்கு ஒன்றரை லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது போய், ஆண்டுக்கு 5 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலும் மின் தேவை அதிகரித்துவிட்டது.

தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு 1,000 மெகாவாட் தர வாக்குறுதி அளித்திருப்பதாக, அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். இதனால் தமிழகத்துக்கு வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். எனவே மின்சார தட்டுப்பாடு இருக்காது.

இவ்வாறு அமைச்சர் வீராசாமி கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் கடல் கொந்தளிப்பு: மக்கள் பீதி
16-ல் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
சென்னை நகர புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன்
சென்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி முதல்வர் சஸ்பெண்ட்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
போலீசார் சஸ்பெண்ட் வெறும் கண்துடைப்பு: விஜயகாந்த்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...