யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
16-ல் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 09:19 IST )
இலங்கை தமிழர் பிரச்னைக்காக வரும் 16 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, நடிகர் விஜய் திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ தமிழர்கள் மீது தனக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட உண்ணாவிரத்ம் இருக்கத் தீர்மானித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அதன்படி வரும் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகக் கூறியுள்ள அவர், அதே நாளில் மாவட்ட தலைநகரங்களிலும், பிற நகரங்களிலும் உண்ணாவிரதம் இருக்கும்படி தனது ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தனது கோரிக்கையை ஏற்று, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பிய ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எதிர்காலத்தில் நடிகர் விஜை தீவிர அரசியலில் இறங்குவார் என்று அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் தனது ரசிகர் மன்றக் கொடியை சில மாதங்களுக்கு முன் விஜை அறிமுகம் செய்தார்.

தற்போது இலங்கை விவகாரம் உள்ளிட்ட பொது விவகாரங்களில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதையை உண்ணாவிரத அறிவிப்பின் மூலம் எதிர்கால அரசியலுக்கு அவர் படிப்படியாக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை நகர புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன்
சென்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி முதல்வர் சஸ்பெண்ட்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
போலீசார் சஸ்பெண்ட் வெறும் கண்துடைப்பு: விஜயகாந்த்
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...