யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னை நகர புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 09:02 IST )
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிய ஆணையராக கே.ராதாகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த மோதலின் போது காவல்துறையின் நடவடிக்கை பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

மாணவர்கள் மோதல் தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகரும் இதில் இருந்து தப்பவில்லை.

அவர் திடீரென மாற்றப்பட்டு, புதிய ஆணையராக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கே. ராதாகிருஷ்ணன் (51) நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சேகர் மாற்றப்பட்டு, சிவில் சப்ளைஸ் சிஐடி கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவில் சப்ளைஸ் சிஐடி கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்கக இணை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை நகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை வடக்கு இணை ஆணையராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி முதல்வர் சஸ்பெண்ட்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
போலீசார் சஸ்பெண்ட் வெறும் கண்துடைப்பு: விஜயகாந்த்
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றம்
சட்டக் கல்லூரி மோதல்: விசாரணைக்குழு நியமனம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...