|
| சென்னை சட்டக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008 ( 17:36 IST ) | |
சென்னை சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க தவறிய அக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினருக்கிடையே மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று தேர்வு எழுதிவிட்டு வந்த ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது, ஏற்கனவே அங்கு ஆயுதங்களுடன் எதிர்பார்த்து காத்திருந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் கும்பல், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.
இதில் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை தடுக்க தவறிய அக்கல்லூரி முதல்வருக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தடுக்க தவறியதாக சட்டக்கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இத்தகவலை சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டசபையில் இன்று இதனை தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|