யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008   ( 15:11 IST )
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் காரணமாக மக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலகவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாட்களாகவே சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகின்ற பதட்டமான சூழ்நிலை நிலவி வந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் ஏற்கனவே தெரிந்துள்ள போதிலும் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் ஆத்திர உணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடாமல் மாணவர்கள் அமைதி காக்கவேண்டும்.

தமிழக காவல்துறை செயலற்று போனதற்கும், பொது மக்கள் வரலாறு காணாத கடும் பீதிக்கு ஆளாகியிருப்பதற்கும் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
போலீசார் சஸ்பெண்ட் வெறும் கண்துடைப்பு: விஜயகாந்த்
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றம்
சட்டக் கல்லூரி மோதல்: விசாரணைக்குழு நியமனம்
மாணவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்
சென்னை சட்டக் கல்லூரி மோதல் : 7 மாணவர்கள் கைது
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...