யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
போர் நிறுத்தம் செய்வது இலங்கையின் கடமை: கருணாநிதி
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 16:40 IST )
'போர் நிறுத்தம் செய்வது இலங்கையின் கடமை. இதனை இலங்கைக்கு தெரியப்படுத்தி அந்நாட்டை செயல்படவைப்பது மத்திய அரசின் பொறுப்பு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை :

'இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்று நான் கூறியிருந்தேன். தற்போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, 'மத்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விடலாம்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை அரசும், 'விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி 'இலங்கை பிரச்சனைக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறினார்.

கடந்த மாதம் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வைத்த அறிக்கையிலும், 'இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்.

இப்படியொரு பேச்சுவார்த்தை நடைபெறவும், அரசியல் தீர்வு காணவும் இலங்கையில் போர்புரிந்து கொண்டிருக்கின்ற இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் ஆகிய இரு சாராருமே சம்மதம் தெரிவித்து போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.

அதை வலியுறுத்திதான் கடந்த 14 ஆம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக நமது பிரதமரின் கருத்தும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளன. இனி அந்தக் கருத்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டியது இலங்கை அரசின் கடமை.

இதனை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்பட வைப்பது அவசியத் தேவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவ. 14 வரை பேரவை கூட்டம் : சபாநாயகர்
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
ராஜபாளையம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
அதிமுகவில் நீடிக்கிறேன்: எஸ்.வி.சேகர்
இரங்கல் தீர்மானத்துக்குப்பின் பேரவை ஒத்திவைப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...