யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நவ. 14 வரை பேரவை கூட்டம் : சபாநாயகர்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 16:18 IST )
த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் கு‌‌ளி‌ர்கால கூ‌ட்ட‌த் தொட‌ர் வரு‌ம் 14ஆ‌‌ம் தே‌தி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஆவுடைய‌ப்ப‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் கு‌ளி‌ர்கால கூ‌ட்ட‌த்தொட‌ர் இன்று காலை தொடங்கியது.மறை‌ந்த ம‌.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ‌வீர.இளவரச‌ன் உ‌ள்பட 6 பேரின் மறைவு‌க்கு இர‌ங்க‌‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் சபாநாயகர் ஆவுடைய‌ப்ப‌ன் தலைமை‌யி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை அலுவ‌ல் ஆ‌ய்வு‌க்குழு கூ‌ட்ட‌ம் நட‌ந்தது.இக்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ச‌ெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவர் கூறியதாவது:

சட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌‌‌த்தை 14ஆ‌ம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) நடத்த ச‌ட்ட‌ப்பேரவை அலுவ‌ல் ஆ‌ய்வு‌க்குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செய்யப்பட்டது.வரும் 11 ஆ‌ம் தேதி (நாளை) நடைபெறு‌ம் கூ‌ட்ட‌த்‌தி‌ல் 2008 - 09ஆம் ஆண்டின் கூடுதல் செயலர்கள் முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும்.

12 ஆ‌ம் தேதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மாநில கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். 13 ஆ‌ம் தேதி மாநில கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும்.

அதற்கடுத்த நாள் (14 ஆ‌ம் தேதி) மாநில கோரிக்கை மீதான விவாதமும் அதன் மீதான பதில் உரையும் இருக்கும். மாநில கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்ப‌ட்டு பின்னர் மாநில கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்தபின் நிறைவேற்றப்படும்.

இது தவிர சட்ட முன் வடிவுகளும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். வரு‌ம் 11, 12, 13, ஆகிய 3 நாட்களும் சட்ட‌ப்பேரவை அலுவலில் கேள்வி நேரம் இ‌டம்பெறும். 14ஆ‌ம் தேதி கேள்வி நேரம் கிடையாது.

தினமும் காலை 9.30 மணிக்கு கூடும் சட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம் மதியத்துக்கு பிறகு நடைபெறது.

இவ்வாறு ஆவுடையப்பன் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
ராஜபாளையம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
அதிமுகவில் நீடிக்கிறேன்: எஸ்.வி.சேகர்
இரங்கல் தீர்மானத்துக்குப்பின் பேரவை ஒத்திவைப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
புலிகள் போர் நிறுத்தம்: மத்திய அரசுக்கு இ.கம்யூ. கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...