|
| தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008 ( 15:45 IST ) | |
தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன் பின்னர் மழையின் தாக்கம் குறைந்து, பனி பொழியத் தொடங்கியது. எனினும் டிசம்பர் 2ஆவது வாரம் வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, சில தினங்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அது கூறியுள்ளது.
சென்னை நகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை இருக்கக் கூடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|