|
| ராஜபாளையம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்! |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008 ( 12:48 IST ) | |
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது மற்றும் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜபாளையத்தில் கடந்த 11ம் தேதி புதிய பேருந்து நிலையம் திமுக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் விளைவாக, காந்திஜி பழைய பேருந்து நிலையத்தை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ள நிலையில், சாலையோரங்களில் மின்வசதி செய்து தரப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய பேருந்து நிலையம் செயல்படாததால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இதனால், வழக்கம்போல் பழைய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள பொதுநல அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் திமுக அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
வேலை இழப்பு, விலைவாசி உயர்வு என இரட்டிப்பு துன்பத்திற்கு மக்கள் ஆளாகியுள்ள நிலையில், 100 சதவீதம் சொத்துவரியையும் நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இதை கண்டித்தும், உடனடியாக பழைய பேருந்து நிலையம் செயல்பட வலியுறுத்தியும்; விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், நாளை ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|