யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அதிமுகவில் நீடிக்கிறேன்: எஸ்.வி.சேகர்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 12:47 IST )
தான் இன்னுமும் அதிமுகவில் தான் இருப்பதாக, அந்த கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களது கூட்டம் நடந்தது. கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த கூட்டத்திற்கு வரவில்லை.

அண்மைக் காலமாக அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு வரும் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான நடிகர் எஸ்.வி.சேகர், இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. அவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக தலைமை தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கருத்து தெரிவித்த எஸ்.வி. சேகர்," எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதிமுக சார்பில் அதிகாரபூர்வமாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்னை எதற்காகப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை" என்றார்.

" கட்சியில் இருந்து என்னை அதிகாரபூர்வமாக நீக்கும்வரை அக்கட்சியில் தான் நான் இருப்பேன். அதிமுக எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன் " என்றார் அவர்.

" கேமராவுக்குப் பின்னால் சில விஷயங்கள் நடக்கின்றன.தற்போதைய பிரச்னைக்கு அம்மா( ஜெயலலிதா ) வுடன் பேசினால் தீர்வு கிடைக்கும்" என்று எஸ்.வி.சேகர் நம்பிக்கை தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இரங்கல் தீர்மானத்துக்குப்பின் பேரவை ஒத்திவைப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
புலிகள் போர் நிறுத்தம்: மத்திய அரசுக்கு இ.கம்யூ. கோரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...