யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இரங்கல் தீர்மானத்துக்குப்பின் பேரவை ஒத்திவைப்பு
சென்னை (ஏஜென்சி), 10 நவம்பர் 2008   ( 11:56 IST )
இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர், இன்று காலை சரியாக 9.30 மணிக்குத் தொடங்கியது. மறைந்த சட்டப்பேரவை முன்னாள்- இன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் குறிப்புகளை பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் வாசித்தார்.

திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வீர இளவரசன் உட்பட 6 பேருக்கு, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. பேரவை வளாகத்துக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை.

வீர இளவரசன் எம்.எல்.ஏ. மறைவுக்கு துக்கம் கடைபிடிக்கும் வகையில் மதிமுக உறுப்பினர்கள் கறுப்பு பேட்ச் அணிந்திருந்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
புலிகள் போர் நிறுத்தம்: மத்திய அரசுக்கு இ.கம்யூ. கோரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
இருதரப்பிலும் போர் நிறுத்தம் தேவை: முதல்வர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...