யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
புலிகள் போர் நிறுத்தம்: மத்திய அரசுக்கு இ.கம்யூ. கோரிக்கை
சென்னை (ஏஜென்சி), 10 நவம்பர் 2008   ( 10:32 IST )
"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார்" என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதனால், இலங்கை அரசையும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தும்படி மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை‌‌‌ ராணுவத்துடன் நடைபெற்று வரும் போர் குறித்து விடுதலைப் புலிகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று இந்திய க‌ம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்று, போர் நிறுத்தம் செய்வயத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் நேற்று அறிவித்தனர்.

இதுகு‌றி‌த்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறு‌ப்பாள‌ர் நடேசன் கூறுகையில், "நாங்கள் போர் நிறுத்தத்தையே விரும்புகிறோம். போர் நிறுத்தம் செய்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால், ஏற்கனவே போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது, ஒப்பந்தத்தை மீறி இலங்கை தான் மீண்டும் சண்டையை ஆரம்பித்தது. எனவே நாங்கள் தற்காப்பு போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, இலங்கை அரசையும் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்த வேண்டும்" என்று வலியுறுத்திருந்தார்.

இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்தது அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் குறித்து கருத்தை வெளியிட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டோம். அதையேற்று, விடுதலைப் புலிகள் இயக்கமும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

பொறுப்புள்ள ஓர் அரசு என்ற முறையில், இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜபாளையம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!
அதிமுகவில் நீடிக்கிறேன்: எஸ்.வி.சேகர்
இரங்கல் தீர்மானத்துக்குப்பின் பேரவை ஒத்திவைப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...