|
| தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் |
| ராமநாதபுரம் (ஏஜென்சி), 10 நவம்பர் 2008 ( 09:17 IST ) | |
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண் மூடித்தனமாக தாக்கியதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 425 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்தப் பகுதிக்கு 8 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மீனவர்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கியதுடன், துப்பாக்கியாலும், இரும்பு பைபுகளாலும் சரமாரியாக தாக்கினர்.இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்டுவதை கிண்டல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகள், பதப்படுத்தும் பெட்டி ஆகியவற்றையும் கடலில் வீசியுள்ளனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் அனைவரும் பதற்றத்துடனும், பீதியுடனும் கரைக்கு திரும்பினர். இச்சம்பவம் மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை தடுக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|