|
| பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம் |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008 ( 08:57 IST ) | |
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.
சரியாக இன்று காலை 9.30 மணிக்கு பேரவையின் அலுவல்கள் தொடங்குகின்றன. முதலில் மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதன் பின்னர் பேரவையில் கேள்வி நேரம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பேரவையில் 10 சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது.
குளிர்கால கூட்டத் தொடரில் இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்டவற்றை கிளப்பி அரசுக்கு நெருக்கடி தர அதிமுஅக தயாராகி வருகின்றன.
இதுதவிர, எதிர்க்கட்சிகள் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகியவற்றின் குற்றச்சாட்டுக்களையும் திமுக அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
இடதுசாரிகள், பாமக ஆகிய்வை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே திமுகவுக்கு பக்கபலமாக உள்ளது. எனினும், இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
எனவே இன்று தொடங்கும் கூட்டத்தொடர் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|