|
| இருதரப்பிலும் போர் நிறுத்தம் தேவை: முதல்வர்
|
இலங்கை பிரச்சனையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்தால் தான் பலன் ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் மகன் முத்தழகன் சாரதா திருமண விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இலங்கையில் நடக்கின்ற ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒருவரை மட்டும் போர் நிறுத்தம் செய்ய சொல்வது தீர்வாகாது. இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரசனைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
புலிகள் போர் நிறுத்தம்:
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்ய விடுதலைப்புலிகள் முன்வந்துள்ளனர்.
ஏற்கனவே போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது, அதையும் மீறி இலங்கை ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதால்தான் தற்பாதுகாப்புக்காக தாங்களும் போரில் ஈடுபட்டதாகவும், எனவே, இலங்கை அரசையும் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்த வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீனவர்கள் மீது தாக்குதல்:
இதற்கிடையே கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மீனவர்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கியதுடன், துப்பாக்கியாலும், இரும்பு பைப்களாலும் சரமாரியாக தாக்கியதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|