|
| சொத்துவரி: 2 ஊர்களில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), 9 நவம்பர் 2008 ( 16:12 IST ) | |
சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மற்றும் பரமக்குடியில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான சொத்து வரியை 25 சதவீதம் என்ற அளவிலும், தொழிற் கட்டிடங்களுக்கான சொத்து வரியை 100 சதவீதம் என்ற அளவிலும், வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரியை 150 சதவீதம் என்ற அளவிலும் உயர்த்தி திமுக அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டவுடன், "உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளுக்க ஏற்ப சொத்து வரியை தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும், அதை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
ஆனால், சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் எவ்வித திட்டப் பணிகளையும் செய்யவிட மாட்டோம் என்றும் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை திமுக ஆட்சியாளர்கள் மிரட்டுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இதை கண்டித்தும், சொத்துவரி உயர்வு ஆணை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், நாளை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பும் நாளை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|