|
| மதிமுக எம்எல்ஏ வீர.இளவரசன் உடல் அடக்கம்! |
| மதுரை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2008 ( 15:58 IST ) | |
மாரடைப்பால் மரணமடைந்த மதிமுக எம்.எல்.ஏ. வீர.இளவரசன் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர.இளவரசன், மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை வீர.இளவரசனின் உடல் அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வீர.இளவரசன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|