|
| தமிழக சட்டசபை நாளை கூடுகிறது! |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2008 ( 15:52 IST ) | |
இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழக அரசு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ள சூழ்நிலையில், தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இக்கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறலாம் என தெரிகிறது.
தமிழக அரசியலை தற்போது இலங்கை தமிழர் பிரச்சனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை கூடுவது ஆளும் திமுகவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இடதுசாரிகள், பாமக ஆகிய்வை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே திமுகவுக்கு பக்கபலமாக உள்ளது. எனினும், இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இதுதவிர, முக்கிய எதிர்கட்சியான அதிமுக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகியவற்றின் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் திமுக உள்ளது. குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது போன்றவற்றில் திமுக கடும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள மின்வெட்டு போன்ற பிரச்சனைகளில் எதிர்கட்சிகளை சமாளிக்க மிக கடுமையாக ஆளும் கட்சி போராடவேண்டியதிருக்கும்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்திருப்பது, ஆளும் கட்சிக்கு போதாத காலமாகவே மாறிவிட்டது.
இந்த பிரச்சனைகளை எல்லாம் பின்னுக்கும் தள்ளும் விதமாக, தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
எனவே, இது குளிர்கால கூட்டத்தொடராக இருந்தாலும், சட்டசபைக்குள் நடைபெறும் விவாதங்களில் சூடு பறக்கும் என்பது மட்டும் உறுதி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|