|
| மீண்டும் கூட்டணி : கருணாநிதியுடன் பேச ராமதாஸ் சம்மதம் |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 16:03 IST ) | |
மீண்டும் திமுகவுடன் சமரசமாக செல்ல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.இது தொடர்பாக தமது கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும், உரிய நேரம் வரும்போது கருணாநிதியை சந்தித்துப் பேச தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவைக்க மத்திய அரசை நிர்ப்பந்திக்க வைக்க இயலாமல் போனது, மின்வெட்டு,விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திமுக அரசு கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
இதனிடையே வருகிற 10 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில்,இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரகசிய கூட்டம் போடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதும் திமுகவை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸை மட்டும் நம்பியிராமல்,பாமக ஆதரவையும் தக்க வைத்துக் கொண்டு,விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி பலத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திமுக தரப்பில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார்.அப்போது பாமகவுடன் மீண்டும் சமரசமாக செல்லவும், கூட்டணி தொடரவும் கருணாநிதி விரும்புவதாக ராமதாஸிடம் அப்போது பாலு தெரிவித்தார்.
காடு வெட்டி குரு கைதுக்குப் பின்னர் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கிற்கு பின்னர், அதிமுகவிடமிருந்தும் கூட்டணிக்கான சமிக்ஞை எதுவும் வராததால், தனித்துவிடப்பட்டுவிடுவோமோ என்ற கலக்கம் பாமக தரப்பிலும் இருந்து வந்தது.
இதனால் பாலுவுடனான சந்திப்பின்போது ராமதாஸிடமிருந்தும் ஓரளவுக்கு சாதகமான பதில் வந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம், திமுக தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தி.நகரிலுள்ள பொங்குதமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில், ராமதாஸை தங்கபாலு சந்தித்துப் பேசினார்.அப்போது இப்போதுள்ள கூட்டணி நீடிக்க வேண்டும் என்று தங்கபாலு வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதனை உறுதிபடுத்துவது போல், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், " இது வழக்கமான சந்திப்பு. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்னை சந்தித்து பேசினார். மனம் விட்டு பேசினோம். நடந்த வகைகளை மறந்துவிட்டு மீண்டும் சகோதரர்களாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.அதற்கு நான் பதிலளிக்கையில் அப்படி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சந்திப்போம் என்று கூறினேன்.இது குறித்து எங்கள் கட்சி நிர்வாகி களுடன் கலந்து பேசி, பொதுக் குழுவில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.
இந்த சந்திப்பு தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா? என்று கேட்கப்படுகிறது.தேர்தல் கூட்டணி பற்றி தேர்தலுக்கு முன்பாக எங்கள் கட்சி செயற்குழு கூடி முடிவெடுக்கும்.
மத்திய அரசு இதுவரை நடத்துள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை.ராஜ்பக்சே டெல்லி வரும் போது மத்திய அரசு அவரிடம் வலியுறுத்தும் என்று தங்கபாலு கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதில் மத்திய அரசு கடுமையாக வலியுறுத்தினால் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும்.இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு நாங்கள் எந்த தர்ம சங்கடத்தையும் உருவாக்க மாட்டோம். உருவாக்குபவர்களை பார்த்து அவர் ( கருணாநிதி ) குறை சொல்லட்டும்.
விடுதலைப்புலிகளுக்கும், எங்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் கிடையாது.இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் தான் விரும்புகிறோம் " என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, " நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடரும். இந்த கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிக்கும் " என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், இந்த கருத்தை தாமும் ஏற்றுக் கொள்வதாக பதிலளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|