யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
செ‌ன்னை பர‌‌ங்‌கிமலை‌யி‌ல் ஏசுநாதர் சிலை உடைப்பு!
சென்னை (ஏஜெ‌ன்‌சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 13:43 IST )
சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் இருக்கும் புனித தோமையார் ஆலயத்தில் உ‌ள்ள சுநாதர் சிலையை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேத‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ஆலயத்தின் அருகே ஏசுநாதர் கைகளை விரித்துக் கொண்டு நிற்பது போன்ற சிலை உள்ளது. இந்த சிலையின் கை மற்றும் மார்பு பகுதியை மர்ம கு‌ம்ப‌லை‌ச் சே‌ர்‌ந்த ‌சில‌ர் உடைத்துள்ளனர்.

ஏசுநாத‌ர் ‌சிலை உடை‌‌க்‌க‌ப்ப‌ட்டதைய‌றி‌ந்த அ‌ப்பகு‌தியை‌ச் சே‌‌ர்‌ந்த ‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ள் ஆலய‌த்‌தி‌ன் மு‌ன்பு கூ‌டின‌ர். ‌சிலை உடை‌க்க‌ப்‌ப‌ட்டத‌ற்கு அவ‌ர்க‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌‌‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து ஆலய நிர்வாகிகள் ‌சிலை உடை‌க்க‌ப்‌ப‌ட்டது ப‌ற்‌றி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

புறநகர் காவல்துறை ஆணையர் எஸ்.ஆர். ஜாங்கிட் உத்தரவின் பேரில் பரங்கிமலை காவல்துறையினர், சிலை உடைக்கப்பட்ட பகுதி‌க்கு ‌விரை‌ந்து வ‌ந்து பா‌ர்வை‌யி‌ட்டன‌ர்.

சிலையை உடைத்தவர்களை க‌ண்ட‌றி‌ந்து கைது செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் அ‌ப்பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌‌ர்க‌ளிட‌ம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‌சிலை உடை‌ப்பை‌த் தொட‌ர்‌ந்து அச‌ம்பா‌வித ச‌ம்பவ‌ங்க‌ள் எதுவு‌ம் ஏ‌ற்படாம‌ல் தடு‌க்க ஆலய‌த்தை‌ச் சு‌ற்‌றிலு‌‌ம் பல‌த்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டி.‌வி. நடிக‌ர், நடிகைக‌ள் நாளை உ‌ண்ணா‌விரத‌ம்
ம‌திமுக எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீர.இளவரச‌‌ன் மரண‌ம்!
‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து 18ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இ‌ந்‌திய க‌ம்யூ.
பொது‌த் தேர்வி‌ல் நேரம் அதிகரிப்பு : தங்கம் தென்னரசு!
12 ‌ல் ச‌ட்ட‌ப்பேரவை மு‌ன் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்:பழ.நெடுமாற‌ன்
நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...