யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து 18ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இ‌ந்‌திய க‌ம்யூ.
செ‌ன்னை (ஏஜெ‌ன்‌சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 12:27 IST )
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 18ஆ‌ம் தே‌தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட‌ம் நடத்த‌ ந்திய கம்யூனிஸ்டு க‌ட்‌சி முடிவு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக் குழு அலுவலக‌த்‌தி‌ல் நட‌ந்தது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழகத்தில் சமீபகாலமாக படுகொலைகள், குறிப்பாக அரசியல் படுகொலைகள் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டால் தொழிற் கூடங்கள், விவசாய உற்பத்தி மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அங்கு தமிழர்கள் படுகொலை நிறுத்தப்பட உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அமைதியான சூழ்நிலையில் இனப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வரும் 10ஆ‌ம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், இப்பிரச்சினைகளை எழுப்ப இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 9ஆ‌ம் தே‌தி நடைபெறுகிறது.

விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 18ஆ‌ம் தே‌தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொது‌த் தேர்வி‌ல் நேரம் அதிகரிப்பு : தங்கம் தென்னரசு!
12 ‌ல் ச‌ட்ட‌ப்பேரவை மு‌ன் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்:பழ.நெடுமாற‌ன்
நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
மதுரை து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூடு ‌: விசாரணை க‌மிஷனு‌க்கு உ‌த்தரவு!
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : இலங்கையின் எகத்தாளம்
வி‌டுதலை ‌சிறு‌த்தை எ‌ம்எ‌ல்ஏ பத‌வி ‌விலகுகிறார்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...