|
| பொதுத் தேர்வில் நேரம் அதிகரிப்பு : தங்கம் தென்னரசு!
|
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 12:01 IST ) | |
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது வினாத்தாள்களைப் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் நேரம் 15 நிமிடமாக அதிகரிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கான குறுந்தகடு, ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு, அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கும் விழா, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாளை படிக்க 10 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்து வினாத்தாள் படிக்க கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டு 15 நிமிடமாக அதிகரிக்கப்படும்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு, தேர்வு நடைமுறை எதிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும். இதற்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்சிக்கூடங்கள் கொண்டுவரப்படும்.
அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 10,000 கணினி வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 7,000 கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் போது ஆங்கிலம் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது. இந்த குறைப்பாட்டைப் போக்கும் வகையில் ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆங்கில புலமையும், கணினி அறிவும் இருந்தால் மாணவர்களுக்கு உலகில் எந்த மூலையிலும் வேலை கிடைப்பது உறுதி.
இந்த ஆண்டிற்குள் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|