|
| 12 ல் சட்டப்பேரவை முன் கண்டன ஆர்ப்பாட்டம்:பழ.நெடுமாறன் |
| சென்னை (ஏஜென்சி), 8 நவம்பர் 2008 ( 11:59 IST ) | |
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை முன்பாக வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் 12ஆம் தேதி (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
12ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டமன்றம் நோக்கிச் சென்று கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் உட்பட அனைவரும் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர் துயரம் துடைக்க முன் வரவேண்டும் .
இவ்வாறு அந்த அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|