|
| நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
|
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 11:38 IST ) | |
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி. சுதர்சனம் தலைமையில் சென்னை சத்தியமூத்தி பவனில் நாளை நடக்கிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் தலைமையில் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 6ஆம் தேதி நடப்பதாக இருந்தது. மேலிட பார்வையாளர் வயலார் ரவி வர இயலாத காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|