யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மதுரை து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூடு ‌: விசாரணை க‌மிஷனு‌க்கு உ‌த்தரவு!
செ‌ன்னை (ஏஜெ‌ன்‌சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 11:29 IST )
மதுரை அருகே நடந்த துப்பாக்கி‌ச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.திருப்பதியைக் கொண்ட தனிநபர் விசாரணை‌க் க‌மிஷ‌ன் அமைக்க த‌மிழக அரசு ‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவு:

மதுரை அருகே நடந்த துப்பாக்கி‌ச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஸ்.திருப்பதியைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணைய‌ம் அமைக்கப்படுகிறது.

இந்த ஆணை‌ய‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் துப்பாக்கி‌ச் சூடு நடத்தியதற்கான சூழ்நிலை குறித்தும், துப்பாக்கி சூடு நடத்த வேண்டியது அவசியம்தானா என்பது பற்றியும், நிலைமையை காவ‌ல்துறை‌யின‌ர் கட்டுப்படுத்துவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தும்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும், அதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு அளிக்கும். இந்த விசாரணை ஆணைய‌ம் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யு‌ம்.

இ‌வ்வாறு அ‌ந்த உ‌த்தர‌‌வி‌ல் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எழுமலை‌யி‌ல் பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌ தலைவ‌ர் ‌டா‌க்ட‌ர் கிரு‌‌ஷ்ணசா‌மி‌யி‌ன் கா‌ர் தா‌க்க‌ப்ப‌ட்டதையடு‌த்து இ.கோ‌ட்டை‌ப‌ட்டி ‌கிராம‌த்‌‌தி‌ல் நட‌ந்த மோத‌ல், கலவர‌த்‌தை க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம், கூ‌ட்ட‌த்தை‌க் கலை‌க்கவு‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு நட‌த்‌தின‌ர்.

இ‌தி‌ல் சுரே‌ஷ் எ‌ன்ற வா‌லிப‌ர் து‌ப்பா‌க்‌கி கு‌ண்டு பா‌ய்‌‌ந்து ப‌லியானா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : இலங்கையின் எகத்தாளம்
வி‌டுதலை ‌சிறு‌த்தை எ‌ம்எ‌ல்ஏ பத‌வி ‌விலகுகிறார்
இலங்கை போர் நிறுத்தம் சாத்தியமா ? கருணாநிதி சந்தேகம்
பேரவையில் 10 சட்ட முன்வடிவு தாக்கல்: சபாநாயகர்
இன்று கமல் பிறந்தநாள்: ரசிகர்கள் சோகம்
தமிழகத்தில் மேலும் 100 நூலகங்கள் : அமைச்சர் தகவல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...