|
| தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : இலங்கையின் எகத்தாளம் |
| நாகப்பட்டினம் (ஏஜென்சி), 8 நவம்பர் 2008 ( 10:25 IST ) | |
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 5 ஆம் தேதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் பயந்துபோன மீனவர்கள்,துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக படகுக்குள் அங்குமிங்குமாக ஓடி பதுங்கினர்.இருப்பினும் இலங்கை கடற்படை சுட்டதில் பாபு என்ற மீனவரின் உடலில் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயத்துடன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கினர்.
உடனே அவருடன் வந்த சிவபெருமாள், கந்தசாமி, மதன், குமார் மற்றும் மணி ஆகிய ஐந்து மீனவர்களும் பாபுவை மீட்டு, அங்கிருந்து படகில் கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்த தகவலறிந்ததும் அக்கரைப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கரையில் திரண்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமும், கொந்தளிப்பான நிலைமையும் காணப்பட்டது.இந்த துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதுதான் மத்திய அரசுக்கு இறையாண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சொந்த நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கூட தடுத்து நிறுத்த இயலாத கையாலாகதத்தனத்துடன் மத்திய அரசு இருப்பதாக மீனவர்கள் ஆவேசமுடன் குற்றம் சாற்றினார்கள்.
இனிமேல் இலங்கை கடற்படை,தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று எத்தனை முறைதான் மத்திய அரசு, தமிழகத்தை ஏமாளியாக்கப்போகிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை காணப்படும் இந்த சமயத்தில் கூட இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது என்றால், " உங்களால் என்ன செய்துவிட முடியும் ? " என்று இந்தியாவை அது எந்த அளவிற்கு எகத்தாளமாகவும், ஏளனமாகவும் எண்ணுகிறது என்றுதானே அர்த்தம் என்றும் மீனவர்கள் ஆவேசத்துடன் கூறினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|