|
| விடுதலை சிறுத்தை எம்எல்ஏ பதவி விலகுகிறார் |
| சென்னை (ஏஜென்சி), 7 நவம்பர் 2008 ( 17:31 IST ) | |
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தனது சொந்தத் தொகுதியான திட்டக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வரும் 10ஆம் தேதி கூட உள்ள சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது அவைத்தலைவர் ஆவுடையப்பனிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதாகவும் குற்றம்சாற்றினார்.
இதனால் மத்திய அரசின் செயல்படாத நிலையைக் கண்டித்தும், அதன் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தான் பதவி விலகுவதாக அவர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தாம் பதவி விலகுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். தமிழக சட்டப்பேரவைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2 உறுப்பினர்களில், கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வம்.இவர் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் உள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|