|
| இலங்கை போர் நிறுத்தம் சாத்தியமா ? கருணாநிதி சந்தேகம் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 17:25 IST ) | |
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பை மட்டும் வலியுறுத்துவதால், போர் நிறுத்தம் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் கோ.க.மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது.
ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற கோணத்தில் பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லியிருக்கிறார்.
விடுதலைப்புலிகள் பற்றி தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. திமுகவைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் பற்றி ராஜீவ்காந்தி மறைவுக்கு முன் - மறைவுக்குப்பின் என்று இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை நான் இன்றல்ல - ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
போர் நிறுத்தம் என்பதிலேகூட - போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக் கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.இருதரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரிய வில்லை.
அதனால் தான் இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே இருதரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்டு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து.
மத்திய அமைச்சர் ராஜா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது.
மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார்.
அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே விசாரணை கோரியுள்ளது.அந்தத் துறையிலே எடுக்கப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் பிரதமரின் ஒப்புதலோடுதான் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ராஜா ஏற்கனவே விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
விசாரணை கேட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தின் தலைவரும், ஐக்கிய கூட்டமைப்பின் அமைப்பாளருமான நம்பூதிரி என்பவர் இந்த ஸ்பெக்ட்ரம் கொள்கை குறித்து எழுதியுள்ள கடிதத்தில் (பி.எஸ்.என்.எல். சங்கங்களைச் சார்ந்த சில அமைப்பாளர்களின் சார்பில் அரசு பின்பற்றி வரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் கொள்கை தொடர்பாக சில அய்யப்பாடுகளை எழுப்பி, அவை தமிழ் நாளேடுகளில் வெளி வந்திருப்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு பின்பற்றி வரும் தற்போதைய கொள்கைகளிலிருந்து எந்தவித மாற்றத்தையும் நாங்கள் இதிலே காண முடியவில்லை. அரசு எடுத்த முடிவை நாங்கள் முழுவதுமாக ஆதரிக்கிறோம். உண்மையில் தகவல் தொடர்பு அமைச்சருக்கு; பி.எஸ்.என்.எல். அமைப்பின் எதிர்கால நலன் கருதியும், அதில் பணியாற்றும் அலுவலர்களின் நலன் கருதியும் 3 - ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலமின்றி முன்கூட்டியே ஒதுக்கீடு செய்த தீரமிக்க முடிவிற்காக - எங்களுடைய பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|