|
| பேரவையில் 10 சட்ட முன்வடிவு தாக்கல்: சபாநாயகர் |
| சென்னை (ஏஜென்சி), 7 நவம்பர் 2008 ( 15:06 IST ) | |
தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் 10 சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டியில், வரும் திங்கட்கிழமை (10 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு தமிழக பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் பின்னர் பேரவையில் கேள்வி நேரம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பேரவையில் 10 சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்றார் ஆவுடையப்பன்.
இதன் பின்னர், குளிர்கால கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி விவாதித்து, இறுதி முடிவெடுக்கும் என்றார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர் காலக் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்னை, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கிளப்ப எதிர்க்கட்சியான அதிமுகவும், எதிரணியில் உள்ள பாமக, இடதுசாரிக் கட்சிகளும் தயாராக உள்ளன.
இதனால் இந்தத் தொடர் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|