யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இன்று கமல் பிறந்தநாள்: ரசிகர்கள் சோகம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 13:36 IST )
நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளான இன்று, அவரது ரசிகர்கள் இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் கமலஹாசன் இன்று தனது 54 ஆவது வயதை எட்டியுள்ளார். வழக்கமாக தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கமல் கொண்டாடி வந்தார். ரசிகர்களையும் அன்றைய தினம் சந்தித்துப் பேசுவார்.

ஆனால், இம்முறை தனது பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள் பலியாவதைக் கண்டு வருத்தம் கொண்ட அவர், இதையொட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தனது பிறந்த நாளன்று அஞ்சலி செலுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கமலஹாசனின் பிறந்தநாளை இன்று கொண்டாடவில்லை. மாறாக, போரில் இறந்த ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தங்களின் அன்புக்கு பாத்திரமான கமலின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லையே என்ற சோகம், அவரது ரசிகர்கள் பலரிடம் காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் மேலும் 100 நூலகங்கள் : அமைச்சர் தகவல்
தமிழக இடத்தை அபகரிக்கும் கேரள அரசு
சமரச முயற்சி? ராமதாசுடன் பாலு சந்திப்பு
கும்பகோணம் நினைவு மண்டபம்: ஸ்டாலின் திறப்பு!
மின் வெட்டு: சர்வகட்சிக் கூட்டத்துக்கு சரத் யோசனை
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...