|
| தமிழக இடத்தை அபகரிக்கும் கேரள அரசு |
| தேனி (ஏஜென்சி), 7 நவம்பர் 2008 ( 12:29 IST ) | |
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை அபகரிக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் கோம்பையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ராமர்கல் மேடு உள்ளது.இப்பகுதி வரை தமிழக எல்லை உள்ளது. அதனைத் தாண்டி கேரள மாநில எல்லை தொடங்குகிறது.
புராண காலத்தில் ராம பிரான் வந்து சென்றதால், இப்பகுதி ராமர்கல் மேடு என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை ஓசைபடாமல் கேரள அரசு ஆக்கிரமித்துள்ளது. சுற்றுலா வாசிகளை கவரும் நோக்கில் இங்கு 50 அடி உயரம் கொண்ட குழந்தையுடன் இருக்கும் ஆதிவாசி தம்பதியர் சிலை ஒன்றை கேரள வனத்துறை நிறுவியுள்ளது.
மேலும், ராமல்கல் மேட்டை பார்வையிடம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கேரள அரசு கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோம்பையில் உள்ள ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார் என்பவர் கூறுகையில், 'கேரள வனத்துறை ஆக்கிரமித்துள்ள இடம் தமிழக அரசுக்கு சொந்தமான பகுதி. இதை உறுதி செய்யும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன' என்றார்.
கேரள அரசின் இந்நடவடிக்கையை தமிழக வனத்துறை கண்டும் காணாமல் இருந்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் இதனை தமிழக வனத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பே சிலை நிறுவும் முயற்சியில் கேரளா இறங்கியபோது, தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக, அவர்கள் கூறினர்.
சர்ச்சைக்குரிய பகுதி குறித்து உரிய ஆவணங்கள் தேவைப்பட்டதால், அப்போது கேரளாவின் பணியை தடுக்க முடியவில்லை. அந்த இடம் தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், கேரள அரசிடம் தமிழகம் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|